திறந்த அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை கல்லுடன் பித்தப்பை அகற்றுதல் பித்தக்குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்த குழாயுடன் முன் சிறு குடல் இணைக்கப்படுகிறது.
பித்தக்குழாயின் கீழ் பகுதி முன் சிறு குடலுடன் இணைக்கப்படுகிறது.
மீண்டும் பித்தக் குழாயில் கற்கள் உருவானால் அதை புதிதாக உருவாக்கப்பட்ட மாற்றுப்பாதை வழியாக முன் சிறு குடலை அடையும்.
பித்தக்குழாய் ஓரளவு விரிவடைந்து இருந்தால் தான் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
சில சமயங்களில் மீண்டும் உருவாகும் பித்தக்குழாய் கற்கள் பித்தக்குழாயின் கீழ் பகுதியில் தங்கி வயிற்று வலி உருவாவதை சம்பு சின்ட்ரோம் என்றழைக்கிறோம்.
பெர்குயுடேனியஸ் கோலிசிஸ்ட்டாடமி என்பது பித்தப்பை கற்களுடன் பித்தப்பை அழற்சி ஏற்பட்டு நோயாளியின் உடல்நிலை அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இல்லாவிட்டால் செய்யப்படும் வடிகால் சிகிச்சை முறையாகும்.
பெற்குயுடேனியஸ் டிரான்ஸ் ஹப்பாட்டிக் டிரைன் என்பது பித்தப்பை கல்லுடன் பித்தக்குழாய் கற்களில் இருந்து பித்த குழாயில் தீவிர நுண்ணுயிரியின் தாக்கம் இருக்கும்போது பித்தக்குழாய்க்கு செய்யப்படும் வடிகால் சிகிச்சை முறையாகும்.
பொதுவாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் செய்யப்படுகிறது நோயாளியின் உடல்நிலை மோசமாக இருந்தால் மட்டுமே செய்யப்படுகிறது.
இந்த சிகிச்சை முறையில் முக்கிய அம்சமாக நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட பித்த நீர் அகற்றுவதன் மூலம் உடலில் உள்ள நுண்ணுயிரியின் பாதிப்பை குறைக்கலாம்.
நுண்ணுயிரியின் பாதிப்பு குறைந்த பின் தேவைப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.