Home
Our Blogs & Latest News
Our Blogs & Latest News
இரண்டிற்கும் சிகிச்சை தேவை.
இ ஆர் சி பி மூலம் பித்தக்குழாய் கற்கள் அகற்றப்பட வேண்டும்.
பெரிய பித்தக்குழாய் கற்கள் லித்தோரிப்சி என்ற கருவி மூலம் முதலில் உடைக்கப்படுகின்றது.
பெரிய பித்தக்குழாய் கற்கள் லேப்ராஸ்கோப்பி பித்தக்குழாய் அறுவை சிகிச்சை மூலமாகவும் அகற்றலாம்.
இ ஆர் சி பி சிகிச்சை முறைக்கு பின் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்பட வேண்டும்.
சில தருணங்களில் இரண்டு சிகிச்சை முறைகளும் திறந்த முறையிலேயே செய்யலாம்.
Article id : 81 |
Article Date : 20-05-2025 16:47:27 | Category : General |
பித்தக்குழாய் கற்களுக்கு இ ஆர் சி பி சிகிச்சை முறை செய்யப்படுகின்றது.
பித்தக்குழாய் கற்களை வெளியேற்றுவதற்கென்றே உருவாக்கப்பட்ட பலூன்களை வைத்து பித்தக் குழாய் கற்கள் அகற்றப்படுகின்றன.
பலூன் ஸ்பின்ட்ரோபிளாஸ்டி என்பது பெரிய பித்தக்குழாய் கற்களை அகற்ற பயன்படுத்தப்படும் ஒரு சிகிச்சை முறையாகும்.
பித்த குழாயில் இருக்கும் பெரிய கற்கள் லித்தோடிரிப்டர் என்ற கருவிகளால் உடைக்கப்பட்டு பின்பு அகற்றப்படுகின்றது.
இ ஆர் சி பி மூலம் பித்தக்குழாய் கற்கள் அகற்றப்பட்ட பின் லேப்ராஸ்கோப்பி மூலம் பித்தப்பை அகற்றப்படுகின்றன.
Article id : 82 |
Article Date : 20-05-2025 16:51:45 | Category : General |
இ ஆர் சி பி சிகிச்சை மூலம் பித்தக்குழாய் கற்கள் அகற்றப்படுகின்றன.
பித்தக்குழாயினுள் உரிய சிறிய குழாய் செலுத்துவதே சிகிச்சை முறையின் முதல் கட்டமாகும்.
ஆம்புலரி பலூன் ஸ்பின்ட்ரோபிளாஸ்டி மூலம் பித்தக்குழாயின் வாய்ப்பகுதி விரிவுபடுத்தப்படுகிறது.
அக்குலுசன் கொலஞ்சியோகிராபி என்பது பித்தக்குழாய் கற்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளனவா என்று அறிய பயன்படுத்தப்படும் தொடர் எக்ஸ்ரே பரிசோதனையாகும்.
நிறைவாக பித்தக் குழாயில் வடிகால் பொருத்தப்படுகின்றது.
Article id : 83 |
Article Date : 20-05-2025 16:54:36 | Category : General |
பித்தப்பை கற்கள் மற்றும் பித்தக்குழாய் கற்களுக்கு இம்முறை பரிசீலிக்கப்படுகிறது.
இ ஆர் சி பி மூலம் பித்தக்குழாய் கற்கள் அகற்றப்படுகின்றன.
திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையும் பித்தக்கற்களும் அகற்றப்படுகின்றன.
முழு மயக்கத்திற்கும் தகுதியற்றவருக்கும் இச்சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது.
இருதயம் மற்றும் நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும் இச்சிகிச்சை முறை பயனுள்ளதாக இருக்கும்.
தொடர் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இச்சிகிச்சை முறை பயன்படுகிறது.
Article id : 84 |
Article Date : 20-05-2025 16:56:23 | Category : General |
பித்தப்பை கற்களுடன் பித்தக்குழாய் கற்களுக்கு இம்முறை பரிந்துரைக்கப்படுகிறது.
லேப்ராஸ்கோப்பி மூலம் பித்தப்பையும் பித்தக்குழாய் கற்களும் அகற்றப்படுகின்றன.
லேப்ராஸ்கோப்பி மூலம் பித்தக்குழாய் கற்கள் அகற்றப்பட்டவுடன் டி குழாய் வடிகால் மூலம் பித்தக்குழாய் மூடப்படுகின்றது.
பித்தக்குழாயில் அதிக கற்கள் இருப்பின் அறுவை சிகிச்சையின் போது கொலஞ்சியோகிராபியோ அல்லது கொலஞ்சியோ ஸ்கோப்பியோ செய்யப்படுகின்றது.
பித்தக்குழாய் கற்கள் அகற்றப்பட்டு டி குழாய் பொருத்தப்பட்ட பின் பித்தப்பை அகற்றுதல் நிறைவு செய்யப்படுகின்றது.
பித்தக்குழாயில் இருக்கும் பெரிய கல் மற்றும் இரைப்பையின் வாய்பகுதியில் இருக்கும் அடைப்பு இச்சிகிச்சை முறைக்கு மேற்கொள்ள முக்கிய காரணங்கள் ஆகும்.
Article id : 85 |
Article Date : 20-05-2025 16:59:09 | Category : General |
பித்தப்பை கற்களுடன் பித்தக்குழாய் கற்களில் இருந்து முன்னாலில் வயிற்றின் மேற்பகுதியில் அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ அல்லது பெரிய பித்தக்குழாய் கற்களாக இருந்தாலோ இம்முறை பரிந்துரைக்கப்படுகின்றது.
பித்தக்குழாயை கண்டறிந்து அதை திறந்து அதனுள் இருக்கும் கற்கள் அகற்றப்படுகின்றன.
அறுவை சிகிச்சையின் போது செய்யப்படும் கொலஞ்சியோகிராம் அல்லது கோலிடாக்கோஸ்கோப்பி பரிசோதனை கற்கள் முழுமையாக அகற்றப்பட்டதை உறுதி செய்கின்றது.
திறக்கப்பட்ட பித்தக்குழாய் டி குழாயின் உதவியுடன் மூடப்படுகின்றது.
டி குழாய் கொலஞ்சியோகிராம் பரிசோதனைக்கு பின்பு தான் டி குழாய் அகற்றப்பட வேண்டும்.
Article id : 86 |
Article Date : 20-05-2025 19:57:58 | Category : General |